409. நிறவெறி பிடித்த தென்னாபிரிக்க மேட்ச் ரெ·ப்ரி
ஹர்பஜன் மேல் சைமண்ட்ஸ் (இனவெறி சார்ந்த சொற்களை பிரயோகித்து தன்னைத் திட்டியதாக) வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இன்று நடந்த விசாரணையின் முடிவில், ஹெய்டன் மற்றும் கிளார்க் ஆகியோரின் வாக்குமூலங்களை ஏற்பதாகக் கூறி, மேட்ச் ரெ·ப்ரியான மைக் பிராக்டர், ஹர்பஜன் அடுத்த மூன்று டெஸ்ட் பந்தயங்களில் ஆடுவதற்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கினார் !
2-வது டெஸ்ட்டில் அம்பயர்கள், நமது அணிக்கு எதிராக அடித்த கூத்து போதாது என்று இப்போது இப்படி ஒரு செருப்படி !! இப்படி நேர்மையற்று பெற்ற வெற்றியை நினைத்து துளியும் வெட்கமில்லாமல், பாண்டிங்கும், கிளார்க்கும் ஒரு பேட்டியில் மிதப்பாகப் பேசியதைப் பார்த்தபோது, மிகுந்த எரிச்சலாக இருந்தது. என்ன மாதிரி ஜந்துக்கள் இந்த ஆஸ்திரேலிய அணியினர் ? வெற்றி பெறுவதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாமா என்ன ?
இந்த விசாரணையின்போது, களத்தில் ஹர்பஜனுடன் இருந்த சச்சினின் கூற்று மற்றும் இந்தியத் தரப்பின் வாதம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதிலிருந்தே தெரியவில்லையா, மைக் பிராக்டர் ஒரு நிறவெறி பிடித்த ஆள் என்பது ? அதாவது, அவரது நியாயத்தின்படி, வெள்ளையர்கள் சத்தியசந்தர்கள், பிரவுன் கலர் ஆட்களான இந்தியர்கள் உண்மை பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது !!! என்ன மாதிரியான மனவியாதி இந்த மேட்ச் ரெ·ப்ரிக்கு உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது :(
பிராக்டர் இப்படி பாரபட்சமாக நடந்து கொண்டதில் ஒரு பின்னணி உள்ளது. முந்தைய டெஸ்ட்டில், அம்பயர் யுவராஜை அவுட் என்று நிர்ணயித்தபோது, யுவராஜ் உடனே களத்தை விட்டு வெளியேறாமல் தனது எதிர்ப்பை தெரிவித்த செயலுக்கு, பிராக்டர் தண்டனை எதுவும் வழங்கவில்லை. அது ICC தலைவரான மேல்கம் ஸ்பீடுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனாலேயே, இந்த முறை, ஹர்பஜன் மேல் உள்ள குற்றச்சாட்டை சரியாக விசாரிக்காமல், மேல்கம் ஸ்பீடை குஷிப்படுத்துவதற்காக, ஹர்பஜனுக்கு கடுமையான தண்டனை வழங்கி விட்டார் !!!!! ஆக, ஹர்பஜன் பலிகடா ஆக்கப்பட்டு விட்டார் என்பது தான் எனது கருத்து :(
ICC ஈட்டும் அத்தனை பணமும், இந்திய துணைக்கண்டத்து மக்களுக்கு கிரிக்கெட் விளையாட்டில் உள்ள ஈடுபாட்டாலும், அவர்கள் தரும் ஆதரவாலும் வருகிறபோதே, இந்த வெள்ளையர்களுக்கு இவ்வளவு அகங்காரமும், திமிரும் இருப்பதற்கு என்ன காரணம் ?? BCCI-க்கு கொஞ்சம் சூடு, சொரணை மிச்சமிருந்தால், ஆஸ்திரலேய tour-ஐ இத்துடன் முடித்துக் கொள்வதாக அறிவித்து விட்டு, இந்திய அணியை உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்வதே சரியான முடிவாக இருக்கும்.
12 மறுமொழிகள்:
Test :(
அடபோங்க நீங்க நடுவர்களுக்கு எதிராக புகார் கூட BCCI கொடுக்கவிரும்பவில்லையென்று சில செய்திகள் வருகின்றது. என்ன செய்வது நம்ம தலையெழுத்து அவுஸ்திரேலியா போன்ற ரவுடிகளுடன் மோதவேண்டியுள்ளது. பொண்டிங் கிளார்க் போன்றவர்களின் திமிரை அடக்க யாரோ ஒருவன்கள் நிச்சயம் வருவார்கள்.
பிராக்டர் இப்படி பாரபட்சமாக நடந்து கொண்டதில் ஒரு பின்னணி உள்ளது. முந்தைய டெஸ்ட்டில், அம்பயர் யுவராஜை அவுட் என்று நிர்ணயித்தபோது, யுவராஜ் உடனே களத்தை விட்டு வெளியேறாமல் தனது எதிர்ப்பை தெரிவித்த செயலுக்கு, பிராக்டர் தண்டனை எதுவும் வழங்கவில்லை. அது ICC தலைவரான மேல்கம் ஸ்பீடுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனாலேயே, இந்த முறை, ஹர்பஜன் மேல் உள்ள குற்றச்சாட்டை சரியாக விசாரிக்காமல், மேல்கம் ஸ்பீடை குஷிப்படுத்துவதற்காக, ஹர்பஜனுக்கு கடுமையான தண்டனை வழங்கி விட்டார் !!!!! ஆக, ஹர்பஜன் பலிகடா ஆக்கப்பட்டு விட்டார் என்பது தான் எனது கருத்து :(
நிறவெறியைக் கடுமையாக எதிர்த்த நாடு இந்தியா. உலகம் முழுவதும் அறிந்த விஷயம்.
இன்று ஒரு இந்தியரின் மீது நிறவெறி அவதூறு குற்றச்சாட்டு கூறப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டதை ஏற்றுக் கொள்வதைப் போன்ற அவமானம் வேறில்லை.
நடுவர்கள் ஒரு தலைபட்சமாக தீர்ப்பு வழங்கி அணியை தோற்கடித்ததை வேண்டுமென்றால் 'sportsmanship' ஆக எடுத்துக் கொள்ளலாம் - போனால் போகிறது என்று.
'நிறவெறி' பிடித்தவர்கள் யார் என்பதை அனைவரும் அறிவார்கள். மீதமுள்ள ஆட்டங்களைப் புறக்கணித்து வெளியேற வேண்டும்.
இனியும் தொடர்ந்து விளையாடுவது அபத்தம்.
//ஆக, ஹர்பஜன் பலிகடா ஆக்கப்பட்டு விட்டார் என்பது தான் எனது கருத்து :(//
இருக்கலாம் - ஆனால் அதை ஏற்கவேண்டுமென்பதில் புன்னகைக்க இடமில்லை என்று இந்திய நிர்வாகம் உறுதியாக அறிவிக்க வேண்டும்..
வந்தியத்தேவன்,
கருத்துக்கு நன்றி. யாராவது பாண்டிங்குக்கு ஆப்பு வைக்கணும் என்பது தான் என் பேராசையும் !!!
நண்பன்,
இந்த தடையை ஏற்றுக் கொண்டால், குற்றத்தை ஒப்புக் கொண்டது போல் ஆகி விடும். அதை விட மோசம் / அவமானம், நாம் நிறவெறியர்களாக அடையாளம் காணப்படுவதே !!! நன்றி.
நண்பன்,
அர்பஜன் சிங்கின் மீதான தடையை ரத்து செய்யாவிட்டால், இந்திய அணி திரும்பி வருவது தான் சரியான முடிவாக இருக்கும் !
//BCCI-க்கு கொஞ்சம் சூடு, சொரணை மிச்சமிருந்தால், ஆஸ்திரலேய tour-ஐ இத்துடன் முடித்துக் கொள்வதாக அறிவித்து விட்டு, இந்திய அணியை உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்வதே சரியான முடிவாக இருக்கும்.//
அதே...அதே...
ஒருவரை குரங்கு என்று கேலி செய்வதற்கும், நிறவெறிக்கும் இந்தியாவைப் பொறுத்தவரை எந்த சம்மந்தமுமில்லை. இது அவர்களுக்கு தெரியாமல் இருக்காது.
உமையணன், சீனு,
கருத்துக்கு நன்றி.
At last, BCCI has won the battle of nerves against the ICC :)
//
ஒருவரை குரங்கு என்று கேலி செய்வதற்கும், நிறவெறிக்கும் இந்தியாவைப் பொறுத்தவரை எந்த சம்மந்தமுமில்லை. இது அவர்களுக்கு தெரியாமல் இருக்காது.
//
பிரச்சினை அதுவல்ல, ஆஸ்திரேலியர்கள் சத்தியவான்கள் என்று நினைக்கும் மைக் பிராக்டரை என்ன செய்தால் தகும் ??? :(
a very nice ricky ponting here
http://www.zakeh.com/wp-content/uploads/2008/01/5.jpg
lol
Post a Comment